TNEA
Code

2755

TRINOVA – 2026

நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் NIT முத்தமிழ் மன்றம் இணைந்து, TRINOVA – 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை 21.11.2026 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை சிறப்பாக நடத்தின.

இப்போட்டியில் கல்லூரியின் அனைத்து துறைகளிலிருந்தும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் திருக்குறள்களைத் தெளிவாகவும் சிறப்பாகவும் ஒப்புவித்து, திருக்குறளின் அறநெறிக் கருத்துகளையும் தமிழ்மொழியின் பெருமையையும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வு மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும், திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை அறிந்து பின்பற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வெளிப்படுத்தவும், தமிழின் தொன்மை மற்றும் சிறப்பினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும் இப்போட்டி சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இத்தகைய சிறப்பான நிகழ்வினை நடத்துவதற்கான வாய்ப்பையும் ஊக்கத்தையும் வழங்கிய நேரு கல்விக் குழுமங்களின் தலைவர் அவர்களுக்கும், நேரு கல்விக் குழுமங்களின் செயலாளர் அவர்களுக்கும், நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் அவர்களுக்கும் NIT முத்தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் வாழ்க! திருக்குறள் வாழ்க!